Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியாவில் மோசமாகும் கிருமிப்பரவல் - நெருக்கடிகாலத் திட்டம் செயல்படுத்தப்படுமா?

தென்கொரியா அதிகரிக்கும் கிருமிப்பரவலை முறியடிக்க நெருக்கடிகாலத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுபற்றிப் பரிசீலிக்கிறது.

வாசிப்புநேரம் -
தென்கொரியாவில் மோசமாகும் கிருமிப்பரவல் - நெருக்கடிகாலத் திட்டம் செயல்படுத்தப்படுமா?

(கோப்புப் படம்: AFP / Jung Yeon-je)

தென்கொரியா அதிகரிக்கும் கிருமிப்பரவலை முறியடிக்க நெருக்கடிகாலத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுபற்றிப் பரிசீலிக்கிறது.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் பாதிப்பேர் சோலில் வசிப்பதால் அங்கு தற்போதுள்ள சூழல் நெருக்கடியானது என்று தென் கொரியப் பிரதமர் கிம் பூ-கியும் (Kim Boo-kyum) கூறினார்.

தென்கொரியாவில் நேற்று (நவம்பர் 23), முன்னெப்போதும் இல்லாத அளவு புதிதாக 4,100க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

நாடு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவின் 69 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பியுள்ளன. சோல் நகரிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் அந்த விகிதம் 80 விழுக்காட்டுக்கும் அதிகம்.

சுகாதார அதிகாரிகள் கூடுதல் படுக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.

புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் தென்கொரியாவில் நோய்த்தொற்றால் உயிரிழப்போர் விகிதம் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்