Images
  • South Korea COVID 476
    (கோப்புப்படம்: AFP)

தென் கொரியா:தொடர்ந்து ஐந்து நாள்களாக, 500க்கும் மேற்பட்ட கிருமிப்பரவல் சம்பவங்கள்-உச்ச விழிப்புநிலையில் அதிகாரிகள்

தென் கொரியாவில், தொடர்ந்து ஐந்து நாள்களாக, 500க்கும் மேற்பட்ட கிருமிப்பரவல் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளனர்.

Sauna எனப்படும் நீராவிக் குளியல் நிலையங்கள், மருத்துவமனைகள், வேலையிடங்கள்- போன்றவற்றில் இருந்து பலருக்கும் கிருமி தொற்றியதாகத் தெரியவந்துள்ளது.

கதகதப்பான வசந்த காலத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடல்கள் காரணமாக, நோய்ப்பரவல் அதிகரித்திருக்கக்கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

இந்நிலையில், தென் கொரியாவில் தடுப்பூசித் திட்டம் மெதுவடைந்துள்ளது.

தொடக்கத்தில் அது, தடுப்பூசிகளைக் கைப்பற்றுவதைக் காட்டிலும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியதே அண்மை நிலைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  

Top