Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் 3-வது முறையாக அதிகரித்த நோய்த்தொற்று - விதிமுறைகள் மேலும் கடுமையாகின்றன

தென் கொரியாவில் 3-வது முறையாக அதிகரித்த நோய்த்தொற்று - விதிமுறைகள் மேலும் கடுமையாகின்றன

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் 3-வது முறையாக அதிகரித்த நோய்த்தொற்று - விதிமுறைகள் மேலும் கடுமையாகின்றன

படம்: AFP / Ed JONES

தென் கொரியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மூன்றாவது முறையாக அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, அங்கு COVID-19 விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்படுகின்றன.

நாள் ஒன்றுக்குப் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆறு நாள்களில் முதன்முறையாக 300-க்கும் குறைவாக பதிவானது.

ஆனால் அதற்குக் கொரோனா பரிசோதனை வார இறுதி நாள்களில் குறைவாக நடத்தப்பட்டதே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் தலைநகர் சோலைச் சேர்ந்தவர்கள்.

சோலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளையிலிருந்து மூன்றாம் கட்ட உச்ச விழிப்புநிலை நடப்புக்கு வரும்.

நாளையிலிருந்து 100-க்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்படும்.

மதுபானக்கூடங்களும் இரவு விடுதிகளும் மூடப்படும்.

உணவகங்களில் உணவை எடுத்துச்செல்வதற்கு மட்டும் அனுமதிக்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்