Images
  • south Korea
    படம்: REUTERS/Kim Kyung-Hoon

தென் கொரியா: சோலில் அடுத்த 2 வாரங்களுக்குத் தளர்த்தப்படும் பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகள்

தென் கொரியத் தலைநகர் சோலில், இன்று பாதுகாப்பான இடைவெளி தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அடுத்த 2 வாரங்களுக்கு அது நடப்பில் இருக்கும்.

அங்கு இரவு 9 மணிக்குப் பிறகு உணவகங்களில் அமர்ந்து உணவருந்த விதிக்கப்பட்டிருந்த தடை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் குறைவானோருக்கு மட்டுமே அனுமதி; வாடிக்கையாளர்களின் பெயர்களும் தொடர்பு விவரங்களும் சேகரிக்கப்படுவது அவசியம்.

உள்ளரங்கு ஒன்றுகூடல்களில் அதிகபட்சம் 50 பேர் கலந்துகொள்ளலாம்; வெளியிடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்கலாம்.

ஆனால் விளையாட்டு நிகழ்வுகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால் பொருளியல் நடவடிக்கைகளைப் படிப்படியாக மீண்டும் தொடங்க முடியும் என்று தென் கொரியச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், இம்மாதம் 28ஆம் தேதி, Chuseok விடுமுறையை முன்னிட்டு, மீண்டும் இரண்டு வாரங்களுக்குக் கடுமையான விதிமுறைகள் விதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

தற்போதைய சூழலை வல்லுநர்கள் முழுமையாக மறுஆய்வு செய்த பிறகு, அரசாங்கம் 2 வாரங்களுக்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுத்தது.

கடந்த மாத இறுதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு, கிருமித்தொற்று உறுதியானோர் எண்ணிக்கை சுமார் 100க்குக் குறைந்தது.
 

Top