Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சோலில் 30 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே இனி பள்ளிக்குச் செல்வார்கள்

தென் கொரியத் தலைநகர் சோலில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சோலில் 30 விழுக்காட்டு மாணவர்கள் மட்டுமே இனி பள்ளிக்குச் செல்வார்கள்

படம்: AFP/Ed JONES

தென் கொரியத் தலைநகர் சோலில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு, கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதகரிக்கும் வேளையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் மட்டுமே இனி பள்ளிகளுக்குச் செல்வார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றவர்கள் வீட்டில் இருந்தபடி கற்றுக்கொள்வார்கள்.

அது பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

தென் கொரியாவில் கிருமித்தொற்றுப் பாதிப்பு குறைந்ததை அடுத்து, பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வந்தன.

பள்ளிகள் கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டன.

இருப்பினும், அண்மை நாள்களில், Bucheon வட்டாரத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

96 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன.

அந்நாட்டில் நோய் மீண்டும் தலைதூக்குவதையொட்டி அதிகாரிகளிடையே அச்சம் நிலவுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்