Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் மேலும் 104 COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்; 5 பேர் பலி

தென் கொரியாவில் மேலும் 104 COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்; 5 பேர் பலி

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் மேலும் 104 COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்; 5 பேர் பலி

(கோப்புப்படம்: AFP)

தென் கொரியாவில் மேலும் 104 COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இத்துடன் கிருமித்தொற்றால் அங்கு 9,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமித்தொற்றுக்கு மேலும் 5 பேர் பலியானர்.

தென் கொரியாவில் COVID-19 கிருமித்தொற்றின் காரணமாக மாண்டோர் எண்ணிக்கை தற்போது 131ஐ எட்டியுள்ளது.

அங்கு உள்நாட்டில் கிருமிப் பரவல் குறைந்திருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களினால் கிருமித்தொற்று பரவுவதால் கவலைகள் எழுந்துள்ளன.

இதனால் அமெரிக்காவிலிருந்து தென் கொரியா செல்பவர்களிடம் நடத்தப்படும் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தென் கொரியா தெரிவித்துள்ளது.

ஐரோப்பா, சீனா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து செல்பவர்களைச் செயலிகள் வழி கண்காணிக்கிறது தென் கொரிய தலைநகரான சோல்.

ஐரோப்பாவிலிருந்து தென் கொரியா செல்லும் நீண்ட கால அனுமதிச்சீட்டு கொண்ட பயணிகள் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தும் விதிமுறை கடந்த வியாழக்கிழமை நடப்புக்கு வந்தது.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நாளைக்குள் அமெரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கும் அமல்படுத்தப்படும் என்று தென் கொரிய பிரதமர் கூறியுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்