Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கொரியா: பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

தென் கொரியாவில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

வாசிப்புநேரம் -

தென் கொரியாவில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து அங்கு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.

நோய்ப்பரவலோடு வாழும் தென் கொரியத் திட்டத்தின் ஒரு பகுதியாகப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அங்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் 80 விழுக்காட்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

நேற்று தென் கொரியாவில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை, 6 நாளில் இல்லாத வகையில் மூவாயிரத்துக்குக் கீழ் பதிவானது.

இருப்பினும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும் நோய்ப்பரவல் மீண்டும் அதிகரிக்குமா என்ற கவலை எழுந்துள்ளது

தென் கொரியாவில் கடுமையாக நோய்வாய்ப்படக்கூடியவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

அதனால், மருத்துவமனைகளின் பளு அதிகரிக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்