Images
  • South Korea
    (கோப்புப் படம்: Ahn Young-joon/AP)

நிலைமை மோசமானால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் -எச்சரிக்கும் தென்கொரியா

தென் கொரியாவில், COVID-19 நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அண்மைய நிலவரப்படி புதிதாக 62 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது.

பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை தற்போது 12,700க்கும் அதிகமாகியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருவோரால் ஏற்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

மே மாதத் தொடக்கத்தில் தென் கொரியா அதன் கட்டுப்பாட்டுகளைத் தளர்த்தியது.

அதிலிருந்து பல்வேறு இடங்களில் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் தலைதூக்கி வருகின்றன.

நிலைமை மோசமடைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Top