Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: சிறப்புத் தடுப்பூசிச் சான்றிதழ் வழங்கத் திட்டமிடுகிறது தென்கொரியா

தென் கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, சிறப்புத் தடுப்பூசிச் சான்றிதழை அறிமுகம் செய்ய அந்நாடு திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிறப்புத் தடுப்பூசிச் சான்றிதழ் வழங்கத் திட்டமிடுகிறது தென்கொரியா

(கோப்புப் படம்: REUTERS/Kim Hong-Ji)

தென் கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதம் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, சிறப்புத் தடுப்பூசிச் சான்றிதழை அறிமுகம் செய்ய அந்நாடு திட்டமிடுகிறது.

அந்தச் சிறப்புத் தடுப்பூசிச் சான்றிதழ் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் சமூக வளாகங்களுக்குள் நுழைய அனுமதி அளிக்கும் என்று தென் கொரியப் பிரதமர் கிம் பூ கியும் (Kim Boo-Kyum) கூறினார்.

கோவிட்-19 நோய்ப்பரவலுடன் சேர்ந்து வாழப் பழகிக்கொள்ளும் திட்டத்தின்கீழ் மக்களைத் தயார்ப்படுத்தும் உத்தியாக அது கருதப்படுகிறது.

அடுத்த மாதம் 9ஆம் தேதி சிறப்புத் தடுப்பூசிச் சான்றிதழை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்