Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியாவில் தடுப்பூசிகளுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படலாம்

1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தென் கொரியாவில் தடுப்பூசிகளுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படலாம்

(படம்:Ahn Young-joon/Pool via REUTERS)

தென் கொரியாவில் தடுப்பூசிகளுக்கு விரைவில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

AstraZeneca தடுப்பு மருந்தில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான இருப்பே எஞ்சியுள்ளதாக அவர்கள் கூறினர்.

அதனால் தடுப்பூசி போடும் திட்டத்தில் தாமதம் ஏற்படலாமென்ற கவலை எழுந்துள்ளது.

தென் கொரியா இதுவரை 2 மில்லியன் முறை போடத் தேவையான AstraZeneca தடுப்பு மருந்தைப் பெற்றுள்ளது.

1.8 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

கூடுதல் மருந்து வந்து சேராவிட்டால், மீதமுள்ள தடுப்பூசிகள் இரண்டு நாள்களுக்குள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென் கொரியத் தடுப்பூசித் திட்டத்தின் முதற்கட்டமாக, தாதிமை இல்லவாசிகளுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் AstraZeneca தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அரிதான ரத்தக் கட்டிகள் ஏற்படும் அபாயத்தால், 30 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்படுவதில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்