Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்படகூடும் - தென் கொரியா

சோல்: வடகொரியாவின் அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சை விரைவுபடுத்த அமெரிக்காவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நிறுத்திவைக்கத் தேவைப்படலாம் என்று தென்கொரியா கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவுடனான கூட்டு ராணுவப் பயிற்சிகள் நிறுத்தப்படகூடும் - தென் கொரியா

(படம்: AFP/Jung Yeon-Je)

சோல்: வடகொரியாவின் அணுவாயுதக் களைவு பற்றிய பேச்சை விரைவுபடுத்த அமெரிக்காவுடனான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நிறுத்திவைக்கத் தேவைப்படலாம் என்று தென்கொரியா கூறியுள்ளது.

தென் கொரிய அதிபர் அலுவலகம் அவ்வாறு தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

அதிகச் செலவில் வழக்கமாக நடைபெறும் சர்ச்சைக்குரிய இராணுவப் பயிற்சிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருந்தார். வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் நேற்று (ஜூன் 12) நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்