Images
  • ccs
    கோப்புப்படம்: AP images

தென் சீனக் கடலில் கடற்படைப் பயிற்சிகளைத் தொடரவிருப்பதாக பிலிப்பீன்ஸ் அறிவிப்பு

தென் சீனக் கடலில், கடற்படைப் பயிற்சிகளைத் தொடரவிருப்பதாக, பிலிப்பீன்ஸ் அறிவித்துள்ளது.

முன்னதாக, அந்தப் பயிற்சிகளை நிறுத்துமாறு சீனா எச்சரிக்கை விடுத்திருந்தது.

தென் சீனக் கடலில் இருக்கும் சீனக் கப்பல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மணிலா, சென்ற மாதம் அந்தப் பயிற்சிகளைத் தொடங்கியது.

வழக்கமான வருடாந்திரப் பயிற்சிகளின் ஒருபகுதியாகவே தனது கப்பல்கள் தென் சீனக் கடலில் இருப்பதாக பெய்ச்சிங் குறிப்பிட்டது.

இதற்கிடையே பிரிட்டன், HMS Queen Elizabeth என்ற தனது ஆகப் புதிய விமானந்தாங்கிக் கப்பலை, அந்த வட்டாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.

ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளோடு அது கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடவிருக்கிறது.

தென் சீனக் கடல் பகுதியில், பிரிட்டிஷ் போர்க் கப்பலின் வருகை, சீனாவுக்குச் சினமூட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Top