Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் கொரியா: பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்த தாதியர் நால்வருக்குக் கிருமித்தொற்று

தென் கொரியா: பெரிய மருத்துவமனையில் பணிபுரிந்த தாதியர் நால்வருக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -

தென் கொரியாவின் பெரிய மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்த தாதியர் நால்வருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து, புதிய கிருமித்தொற்றுக் குழுமம் குறித்த அச்சம் உருவாகியுள்ளது.

மருத்துவமனையில் மேலும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதால், அதிகாரிகள் உச்ச விழிப்புநிலையில் செயல்பட்டு வருகின்றனர்.

கிருமித்தொற்றால் அங்கு 11,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாண்டோர் எண்ணிக்கை 263.

தென்கொரியாவில், பள்ளிகள் கட்டங்கட்டமாக மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

உயர்நிலைப் பள்ளிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இன்று பள்ளிக்குத் திரும்பினர்.

கடந்த புதன்கிழமையே அவர்கள் பள்ளி திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அதிகாரிகள் அதை ஒத்திவைத்தனர்.

சோல் நகர இரவு விடுதிகளில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானது அதற்குக் காரணம்.

மேலும் 32 பேருக்குக் கிருமி தொற்றியது குறித்து அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.

கடந்த 9 நாள்களில், 30க்கும் அதிகமானவர்களிடம் கிருமித்தொற்று கண்டறியப்பட்டது இதுவே முதல்முறை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்