Images
  • Space Station
    (படம்: Pixabay)

இந்தியா தனிப்பட்ட விண்வெளி ஆய்வு நிலையத்தை உருவாக்க திட்டம்

இந்தியா, விண்வெளியில் தனக்கெனத் தனிப்பட்ட ஆய்வு நிலையத்தை உருவாக்கத் திட்டமிடுகிறது.

2022ஆம் ஆண்டில், விண்வெளிக்கு முதன்முறையாக வீரர்களை அனுப்பும் திட்டத்தை நிறைவேற்றியபிறகு, ஆய்வுநிலையம் அமைக்கப்படும். 

ISRO எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தின் தலைவர் K சிவன் அந்தத் தகவலை வெளியிட்டார். 

நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில், சொந்த விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்கத் திட்டமிடுவதாக அவர் சொன்னார். 

ஆய்வு நிலையத் திட்டத்தோடு நிறுத்திவிடாமல், நிலவுக்கான அனைத்துலகப் பயணத் திட்டத்திலும் இந்தியா இணைந்துகொள்ளுமென்றார் அவர். 

பூமிக்கு 400 கிலோமீட்டர் உயரத்தில், புதிய ஆய்வு நிலையம் நிலைநிறுத்தப்படும்.

20 டன் எடையுள்ள அதில், விண்வெளி வீரர்கள் 15 முதல் 20 நாள்கள்வரை தங்கமுடியும். 

இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளில், ஆய்வு நிலையம் விண்ணுக்கு அனுப்பப்படலாமென இஸ்ரோ குறிப்பிட்டது. 

அதற்கு முன்னதாக, இரண்டிலிருந்து மூன்று விண்வெளி வீரர்களை, விண்கலத்தில் ஐந்திலிருந்து ஏழு நாள்களுக்குத் தாழ்வான சுற்றுப்பாதையில் அனுப்பிவைக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படவேண்டும்.  

Top