Images
  • sri lanka (2)
    (படம்: Ishara S. KODIKARA AFP)

முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் என்ற திட்டத்திலிருந்து பின்வாங்கும் இலங்கை

இலங்கை, உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றை இறக்குமதி செய்வதைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது.

உலகிலேயே முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்யும் முதல் நாடாவதற்கான திட்டத்திலிருந்து இலங்கை பின்வாங்கி விட்டது.

உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக அவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இலங்கையில், மே மாதம், விவசாய உரப் பொருள்களின் இறக்குமதிக்கு முழு அளவில் தடை விதிக்கப்பட்டது.

இயற்கை விவசாயத்துக்கு மாறத் திடீரென முடிவெடுக்கப்பட்டது, அரிசி போன்ற தானியங்களின் விளைச்சலைப் பாதிக்கும் என்று வேளாண்துறை நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

உரப் பொருள்கள் கிடைப்பதற்கு வழி செய்யாவிட்டால், பயிர் செய்யப் போவதில்லை என்று விவசாயிகளும் போர்க்கொடி உயர்த்தினர்.

விவசாயிகளின் தேவைக்கேற்ப இயற்கை உரத்தை இலங்கையால் தயாரிக்க முடியவில்லை.

விவசாயிகள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த வேளையில், உரப் பொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை நீக்கியுள்ளது. 

-AFP

Top