Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கை: புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளன

இலங்கையில் பெரிய குழிகளில் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
இலங்கை: புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளன

(படம்: AFP)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

இலங்கையில் பெரிய குழிகளில் புதைக்கப்பட்டிருந்த ஏராளமான சடலங்களின் எலும்பு மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உள்நாட்டுப் போர் இடம்பெற்ற மன்னார் மாவட்டத்தில் அந்தக் குழிகள் உள்ளன.

சுமார் 20 பிள்ளைகளின் எலும்புகள் உட்பட 300க்கும் மேலான எலும்புக்கூடுகள் குழிகளிலிருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் எப்போது மாண்டனர் என்பதைக் கண்டறிவதன்மூலம் அந்த நேரத்தில் அவ்வட்டாரத்தின் நிலைபற்றித் தெரிந்துகொள்ளமுடியும்.

1972இல் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடங்கிய சண்டையில் சுமார் 19,000 பேர் என்ன ஆனார்கள் என்பது குறித்துத் தகவல் இல்லை என்று 2013இல் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்