Images
  • srilanka curfew
    படம்: Reuters 

இலங்கைக் கலவரம்: 23 பேர் கைது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இலங்கையின் புத்தளம் (Puttalam) தொகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரத்தைத் தொடர்ந்து 23 பேரை இலங்கைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

இலங்கையில் அண்மையில் தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் தலைதூக்கியுள்ளன. கலவரத்தில் மோட்டார்சைக்கிள், பேருந்து, பள்ளிவாசல், கடைகள் ஆகியவை சேதமடைந்தன.

நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறையின் பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்தார்.


Top