Images
  • Sri Lanka (1)
    (படம்:  AFP)

தூக்கிலிடும் பணிக்கு ஆள் தேடுகிறது இலங்கை

கொழும்பு: இலங்கையில் தூக்கிலிடும் பணிக்கு ஆள் தேடிவருவதாகச் சிறை அதிகாரிகள் இன்று(ஜூலை 13) தெரிவித்தனர்.

அதற்கான விளம்பரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

 போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனஅறிவித்தார்.

அதற்குமுன் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுவந்தது.

1976ஆம் ஆண்டிலிருந்து இலங்கை யாரையும் தூக்கிலிட்டதில்லை.

அந்தப் பணிக்குத் தெரிவுசெய்யப்படும் நபருக்கு மாதச் சம்பளமாக 35,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.  

Top