Images
  • Sri Lanka
    (படம்: AFP/LAKRUWAN WANNIARACHCHI)

தூக்கிலிடும் பணிக்கு ஊழியர்களைத் தேட விளம்பரங்களை வெளியிடும் இலங்கை

கொழும்பு: இலங்கையில் தூக்கிலிடும் பணிக்கு ஊழியர்களைத் தேட இந்த வாரம், விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பீன்ஸைப் போலவே இலங்கையில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் மரணதண்டனையை அமல்படுத்தப்பட விரும்புவதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன கடந்த வாரம் அறிவித்தார்.

இலங்கை 43 ஆண்டுகளுக்கு முன்னர் 1976ல் கடைசியாக அத்தண்டனையை நிறைவேற்றியது. அதன் பின்னர் குற்றவாளிகளுக்குக் கூடுதல்பட்சமாக ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டு வந்தது.

தூக்கிலிடும் பணியைக் கடைசியாக மேற்கொண்ட ஊழியர் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் பணியைவிட்டு விலகினார்.

அந்தப் பணிக்குத் தெரிவுசெய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக 36,000 ரூபாய் (204 டாலர்) வழங்கப்படும் என இலங்கை தெரிவித்துள்ளது.

  

Top