Images
கடலில் விழுந்த விமானத்தின் பதிவுப்பெட்டிகளைத் தீவிரமாகத் தேடிவரும் இந்தோனேசிய அதிகாரிகள்
இந்தோனேசியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய Sri Wijaya விமானத்தின் சிதைவுகளில் விமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகளை முக்குளிப்பாளர்கள் தேடும் காட்சிகளை அந்நாட்டுக் கடற்படை வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, அந்த விமானம், 62 பேருடன், தலைநகர் ஜக்கார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பை இழந்தது.
விமானத்தின் சிதைவுகளும், மனித உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அந்தச் சம்பவத்தில் உயிர் இழந்த ஒருவரை அவரது கைரேகையைக் கொண்டு அடையாளம் கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த நபர், ஓக்கி பிஸ்மா (Okky Bisma) என்ற 29 வயது விமானச் சிப்பந்தி என அடையாளம் காணப்பட்டதாக நேற்று இரவு தகவல் அளிக்கப்பட்டது.
விமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகளை மீட்டெடுக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.