Images
  • Srilanka parli (1)
    (படம்: REUTERS/Dinuka Liyanawatte)

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

இலங்கையில் அரசமைப்புச் சட்ட நெருக்கடி மோசமடைந்ததைத் தொடர்ந்து நேற்றிரவு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena) நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

கடந்த மாதம் அவர் சுமார் இரண்டு வாரத்திற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்திவைத்தார்.

ஆனால் கடந்த வாரம் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அவர் ஒப்புதல் அளித்தார்.

அதற்கிணங்க வரும் புதன் கிழமை நாடாளுமன்றம் கூடவிருந்தது.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை இன்று முதல் கலைப்பதாக அவரின் அதிகாரப் பூர்வ அறிக்கை தெரிவித்தது.

ஆனால் அது செயலாக்கம் பெறுமா என்பது சந்தேகமே என்று பரவலாகப் பேசப்படுகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக விடுத்த அறிக்கையைத தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் இலங்கை அதிபர் அறிவித்துள்ளார்.
 

Top