Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க பொறுப்பேற்கலாம்

இலங்கையின் அடுத்த பிரதமராக, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று (டிசம்பர் 16) மீண்டும் பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -
இலங்கையின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க பொறுப்பேற்கலாம்

(படம்: Reuters)

இலங்கையின் அடுத்த பிரதமராக, முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இன்று (டிசம்பர் 16) மீண்டும் பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னர் பிரதமர் பொறுப்பை வகித்த திரு. மஹிந்தா ராஜபக்சே (Mahinda Rajapaksa) நேற்று (டிசம்பர் 15) பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நியமனம் இன்று அறிவிக்கப்படலாம்.

திரு. ராஜபக்சே, 7 வாரங்களுக்குப் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

பொதுத் தேர்தல் நடத்தப்படாமல், அந்தப் பொறுப்பில் நீடிக்க தமக்கு எண்ணம் இல்லை என்றார் அவர்.

அடுத்த அரசாங்கத்தை அதிபர் அமைப்பதற்கு வழிவகுக்க, பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் திரு. ராஜபக்சே கூறினார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இருந்து, அவரை வெளியேற்றுவதற்கு ஆதரவாக இரு முறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அப்போது பொறுப்பில் இருந்து விலக மறுத்து வந்த திரு. ராஜபக்சே, நேற்று பதவி விலகினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்