Images
ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது
இந்தோனேசியக் கடற்படை முக்குளிப்பாளர்கள், ஸ்ரீவிஜயா விமானத்தின் குரல் பதிவுப் பெட்டியை மீட்டுள்ளனர்.
62 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் கடந்த சனிக்கிழமை கடலில் விழுந்து நொறுங்கியது.
புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த Boeing 737-500 ரக விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதைக் குரல் பதிவுப் பெட்டி மூலம் கண்டறிய அதிகாரிகள் முற்படுகின்றனர்.
குரல் பதிவுப் பெட்டியையும் தகவல் பதிவுப் பெட்டியையும் கண்டுபிடிக்கக் கிட்டத்தட்ட 160 முக்குளிப்பாளர்கள் தேடல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
3,600 மீட்புப் பணியாளர்கள், 13 ஹெலிகாப்டர்கள், 54 பெரிய கப்பல்கள், 20 சிறிய கப்பல்கள் ஆகியவை தேடல் பணியில் ஈடுபட்டன.
மீட்புப் பணியாளர்கள் மனித பாகங்களைக் கொண்ட 74 பைகளை அடையாளம் காண்பதற்காகக் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.