Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: வீட்டுப் பாடத்தை முடிக்காத மாணவரின் காதில் 'stapler' கொக்கி அடித்த ஆசிரியர்

மலேசியாவில் வீட்டுப் பாடத்தை முடிக்காத மாணவருக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

வாசிப்புநேரம் -

மலேசியாவில் வீட்டுப் பாடத்தை முடிக்காத மாணவருக்கு ஆசிரியர் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

10 வயது மாணவரின் காதில் (stapler) ஸ்டேப்ளர் கொக்கிகளைப் போட்டு விட்டார்.

மகனின் காதில் காயங்களைக் கண்ட பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

லீக்காஸ் வட்டாரத்தில் அமைந்துள்ள பள்ளியில் நடந்தது அந்தச் சம்பவம்.

அதன் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று சபா கல்வி துறை இயக்குநர் மிஸ்திரின் ராடின் கூறியதாகத் தகவல்வெளியானது.

மாணவருக்குக் காயம் ஏற்படுத்திய ஆசிரியருக்கு ஆலோசனை வழங்கப்படவிருக்கிறது.

மாணவர்களைக் கண்டிப்பதன் தொடர்பில் ஆசிரியர்கள் சுயமாக முடிவெடுக்க வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்