Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில், சிறுவர்களைத் துன்புறுத்திய பாலர் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள்

சீனாவில் இரண்டு சிறுவர்களை அடித்து, உதைத்து மற்றொரு சிறுமியின் முகத்தில் மிதித்ததாகக் கூறப்படும் பாலர் பள்ளி ஆசிரியரின் மீது விசாரணை தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனாவில், சிறுவர்களைத் துன்புறுத்திய பாலர் பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள்

(படம்: TODAY)

சீனாவில் இரண்டு சிறுவர்களை அடித்து, உதைத்து மற்றொரு சிறுமியின் முகத்தில் மிதித்ததாகக் கூறப்படும் பாலர் பள்ளி ஆசிரியரின் மீது விசாரணை தொடங்கியுள்ளது.

ஹெஃபெய் (Hefei) நகரிலுள்ள Changchunten Growth Centre பாலர் பள்ளியில் பணிபுரியும் அந்தப் பெண் ஆசிரியர் சிறுவர்களைத் தாக்கிய காட்சிகள் பள்ளியின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன.

இதனைப் பற்றி Anhui Business Daily எனும் செய்தி நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தமது தந்தையிடம் நடந்தவற்றைப் பற்றிக் கூறினார்.

தூங்கிக் கொண்டிக்கும்போது ஆசிரியர் அந்தச் சிறுமியின் முகத்தில் மிதிப்பதை Anhui Business Daily இணையத்தளத்தில் கண்ட தந்தையின் நண்பரும் சிறுமி கூறியதை உறுதிசெய்தார்.

தந்தை பள்ளியிடமும் காவல்துறை மற்றும் கல்வி அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளார். பாலர் பள்ளி உரிமமின்றி இயங்கி வந்திருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

மாதத்துக்கு ஆயிரம் வெள்ளி கட்டணம் வசூலிக்கும் பாலர் பள்ளியில் இப்படியும் நடக்குமா என அதிர்ந்து போயுள்ளனர் சீனப் பெற்றோர்.

மேல் விசாரணைகள் தொடர்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்