Images
  • soccer
    படம்: Suresh Nair/Facebook

காற்பந்துப் போட்டியில் வென்ற மலேசியர்கள்மீது கற்களையும் போத்தல்களையும் வீசியெறிந்த இந்தோனேசியர்கள்

மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நடைபெற்ற ஆசியான் காற்பந்துச் சம்மேளன அரையிறுதிப் போட்டியில் மலேசியா வென்றது.

அதனைத் தொடர்ந்து மலேசியக் காற்பந்துக் குழுமீது கற்களையும் போத்தல்களையும் இந்தோனேசியர்கள் வீசியெறிந்ததாக New Straits Times செய்தித்தாள் தகவல் வெளியிட்டுள்ளது.

3-2 எனும் கோல்கணக்கில் இந்தோனேசிய அணியை அவர்களின் சொந்த நாட்டிலேயே வீழ்த்தியது மலேசிய அணி.

அதனால் கோபமுற்ற இந்தோனேசியக் காற்பந்து ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். 

இந்தோனேசியர்களின் செயல் வருத்தமளித்ததாக மலேசியக் குழுவின் பயிற்றுவிப்பாளர் போஜான் ஹொடக் (Bojan Hodak) கூறியுள்ளார்.

மலேசிய விளையாட்டளர்கள்மீது கற்களையும் போத்தல்களையும் வீசும் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

சம்பவத்தை நேரில் கண்ட பார்வையாளர்கள் விளையாட்டரங்கில் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் இல்லையென்று கூறினர்.


Top