Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அறிவார்ந்த நகரங்களை உருவாக்கி ஆசியான்-ஆஸ்திரேலியா பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது முக்கியம் - பிரதமர் லீ

ஆசியானும் ஆஸ்திரேலியாவும் பல அம்சங்களில் உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த முடியும் எனப் பிரதமர் லீ சியென் லூங் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அறிவார்ந்த நகரங்களை உருவாக்கி ஆசியான்-ஆஸ்திரேலியா பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது முக்கியம் - பிரதமர் லீ

படம்: Reuters

ஆசியானும் ஆஸ்திரேலியாவும் பல அம்சங்களில் உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த முடியும் எனப் பிரதமர் லீ சியென் லூங் இன்று (மார்ச் 18) தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு விவகாரங்களில் மீள்திறனை வளர்த்தல், அறிவார்ந்த நகரங்களை உருவாக்குதல், வட்டாரப் பொருளியல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆசியான்-ஆஸ்திரேலிய சிறப்பு உச்சநிலைக் கூட்டத்தில் அவர் அவ்வாறு கூறினார். ஆசியானின் மீள்திறனையும் புத்தாக்கத் தன்மையையும் வளர்த்துக்கொள்வது முக்கியம் எனவும் அவர் சொன்னார். இணையப் பாதுகாப்பு பற்றியும் குறிப்பிட்ட அவர், அது எல்லைதாண்டிய ஒரு பிரச்சினை என்றார். 

இணையப் பாதுகாப்பைக் கையாள புதிய விதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் வகுக்க வேண்டும் என்றார் பிரதமர் லீ.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்