Images
  • safety drill
    படம்: Facebook

துயரத்தில் முடிந்த பேரிடர் பயிற்சி - பல்கலைக் கழக மாணவி மரணம்

இந்தியா: பேரிடர் பயிற்சியின் போது இரண்டாம் மாடியிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு, மாண்ட கோவை பல்கலைக்கழக மாணவி தொடர்பில், பயிற்றுவிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரிடரின் போது எப்படித் தங்களைத் தற்காத்துக் கொள்வது என மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க அந்தப் பயிற்றுவிப்பாளருக்கு அனுமதி தரப்படவில்லை என்று தேசியப் பேரிடர் நிர்வாக ஆணையம் கூறியுள்ளது.

பயிற்சி கொடுக்கின்ற பெயரில் அந்த 19 வயது மாணவியை அவர் இரண்டாம் மாடியிலிருந்து தள்ளிவிட்டிருக்கிறார்.

அவரின் கவனக்குறைவாலேயே மாணவி மாண்டதாக, பயிற்றுவிப்பாளரின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மாடியிலிருந்து தள்ளப்படும் மாணவர்களைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட வலை, மாணவர்களால் பிடிக்கப்பட்டிருந்தது.

அந்த விபரீதம் நிகழ்ந்தபோது, வலையைப் பிடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் திக்குமுக்காடி நின்ற காட்சி காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கழுத்திலும், தலையிலும் பலத்த காயங்களுக்குள்ளான அந்த மாணவி, சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டார்.

அந்த மாணவி மாடியிலிருந்து தள்ளப்பட்டு, கீழே விழுந்த காணொளி, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, காணொளியைக் கண்டவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

 


உங்கள் கருத்து

Top