Images
  • sumatra tiger killed and buried
    (படம்: AFP/Handout)

இறந்து கிடந்த சுமத்ரா புலி - நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டதா?

வடக்கு சுமத்ராவில் உள்ள பத்தாங் காடிஸ் தேசியப் பூங்காவில் ஓர் ஆண் புலி புதைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சுமத்ரா புலி நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இரகசியமாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் புலியின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது. அதன் சில உறுப்புகளைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

கால்நடைகளைக் கடித்துக் கொல்வதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், புலிக்கு நஞ்சூட்டியிருக்கலாம் என்று கிராம மக்களும், அங்குள்ள தலைவரும் நம்புகின்றனர்.

செம்பனைகளைப் பயிரிடுவதற்காக
இந்தோனேசியாவில் காடுகள் அழிக்கப்படுகின்றன. தங்கள் வாழ்விடங்களை இழந்த வன விலங்குகள் இரை தேடி ஊருக்குள் புகுந்து அங்குள்ள கால்நடைகளை அடித்துச் சாப்பிடுகின்றன.

அருகிவரும் மிருகங்களில் சுமாத்திராப் புலியும் ஒன்று. தற்போது 400க்கும் குறைவான சுமாத்திரா புலிகளே காடுகளில் உலவுவதாகத் தெரியவந்துள்ளது.

Top