Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து: தூசுமூட்டத்தின் தொடர்பில் தலைவர்களிடம் விசாரணை

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நிலவும் தூசுமூட்டத்தின் தொடர்பில் அந்நாட்டுத் தலைவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
தாய்லந்து: தூசுமூட்டத்தின் தொடர்பில் தலைவர்களிடம் விசாரணை

படம்: Channel NewsAsia

தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நிலவும் தூசுமூட்டத்தின் தொடர்பில் அந்நாட்டுத் தலைவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

தாய்லந்துப் பிரதமர் பிராயுத் சான் ஓ ச்சா (Prayut Chan-o-Cha), பேங்காக் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங், தேசியச் சுற்றுப்புற வாரிய உறுப்பினர்கள் ஆகியோருக்கு அந்த அழைப்பாணை விடுக்கப்பட்டது.

நீதிமன்றம் அவர்களை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக The Nation நாளேட்டில் வெளிவந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தூசுமூட்ட நெருக்கடியில் அதிகாரிகள் கவனக்குறைவாக நடந்துகொண்டதாகக் குறைகூறப்படுகின்றனர்.

அதிகாரிகள் நூற்றுக்கணக்கான பள்ளிகளை மூடியுள்ளனர். காற்றின் தரம் குறைந்ததால் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன.

சுவாசப் பிரச்சினை தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்