Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தற்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப்போவதில்லை : இந்திய உச்ச நீதிமன்றம்

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை நீக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் பதிலளித்த இந்திய உச்ச நீதிமன்றம், இப்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
தற்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப்போவதில்லை : இந்திய உச்ச நீதிமன்றம்

(படம்: Reuters)

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை நீக்கக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் பதிலளித்த இந்திய உச்ச நீதிமன்றம், இப்போதைக்கு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று கூறியிருக்கிறது.

விசாரணையை இரண்டு வாரங்களுக்கு அது தள்ளிப்போட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் குடியிருப்பாளர்கள் தங்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிட்டவில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

சுகாதாரப் பராமரிப்பு, உணவு போன்றவை கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.

வட்டாரத்தில் பாதுகாப்பு கடுமையாக இருப்பதால் அந்நிலை ஏற்பட்டதாய் அவர்கள் குறிப்பிட்டனர்.

சென்ற வாரம் இந்தியா ஜம்மு-காஷ்மீரின் சிறப்புத் தகுதியை ரத்து செய்த பிறகு அங்கு ஊரடங்கு உத்தரவு நடப்பில் இருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்