Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஆண்டு தொடங்கியதிலிருந்து இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் குறைந்தது 40 பேர் மரணம்

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் குறைந்தது 40 பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் குறைந்தது 40 பேர் மரணமடைந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

1,000க்கும் மேற்பட்டோருக்குப் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு அந்தக் கிருமித் தொற்றால் சுமார் 1,100 பேர் மாண்டனர். 15,000 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிப்படைந்தனர்.

டிசம்பர் மாதத்திலும் ஜனவரி மாதத்திலும் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. ராஜஸ்தானிலும் புதுடில்லியிலும் அதிகமானோர் பாதிப்படைந்தனர்.

அதையடுத்து, பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க இந்திய அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்