Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வியட்நாமின் மூன்று பண்ணைகளில் பன்றிக் காய்ச்சல்

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் வடக்கு வியட்நாமின் மூன்று பண்ணைகளில் பரவியுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் வடக்கு வியட்நாமின் மூன்று பண்ணைகளில் பரவியுள்ளது.

தலைநகர் ஹனோய்க்குத் தென்கிழக்கே அமைந்துள்ள அந்தப் பண்ணைகளில் இருந்த அனைத்துப் பன்றிகளும் கொல்லப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பன்றிகளிடையே எளிதில் தொற்றக்கூடிய பன்றிக் காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, வியட்நாமுக்கு அருகிலுள்ள சீனாவின் 25 மாநிலங்களும் வட்டாரங்களும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.

வியட்நாமில் உட்கொள்ளப்படும் இறைச்சியில் முக்கால் பங்கு பன்றி இறைச்சி.

அந்தப் பன்றிகள் பெரும்பாலும் உள்நாட்டில் வளர்க்கப்படுபவை.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்