Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ்: எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் Taal எரிமலை

பிலிப்பீன்ஸில் உள்ள Taal எரிமலை, சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ வெடிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ்: எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் Taal எரிமலை

படம்: phivolcs

பிலிப்பீன்ஸில் உள்ள Taal எரிமலை, சில மணி நேரத்திலோ, சில நாட்களிலோ வெடிக்கும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அந்த எரிமலை தொடர்ந்து புகையையும் சாம்பலையும் கக்கி வருகிறது. அதனால், எரிமலை அபாய நிலைக் குறியீடு தொடந்து உச்சத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Batangas மாநிலத்தில் கரும்புகை சூழ்ந்திருப்பதால் அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், எரிமலையிலிருந்து வெளியேறும் சாம்பல் மணிலாவை நோக்கிப் பரவுகிறது.

பிலிப்பீன்ஸ் நேரப்படி அதிகாலை சுமார் 2 மணிக்கு, Taal வட்டாரத்தில் 200க்கும் மேற்பட்ட முறை, எரிமலை அதிர்வுகள் உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது.

எரிமலைக் குமுறல் காரணமாக இதுவரை உயிருடற்சேதம் எதுவும் இல்லை.

எனினும், சாம்பல் மூட்டம் காரணமாக ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் மாண்டார். மூவர் காயமடைந்தனர்.

எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 16,000 அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர்.

மணிலா உட்பட பல்வேறு இடங்களில் பள்ளிகளும் கடைகளும் மூடப்பட்டன.

மணிலா அனைத்துலக விமான நிலையம், படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பி வரும் சூழலில், அங்கு இன்னமும் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்