Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிபீன்ஸ்: தால் எரிமலையைச் சுற்றிச் சில பகுதிகள் முற்றிலும் மூடப்பட்டன

பிலிப்பீன்சின் தால் எரிமலையைச் சுற்றியுள்ள 15 பகுதிகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்சின் தால் எரிமலையைச் சுற்றியுள்ள 15 பகுதிகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

அதனால், அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் திரும்ப இயலாது.

எரிமலை அமைந்துள்ள தீவு, அதற்கு அருகில் உள்ள நகர்கள் ஆகியவற்றில் இருந்து தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்ல மக்கள் மீண்டும் திரும்ப வரலாம்.

அது ஆபத்தானது என்பதால் எல்லைகளை மூடும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

எல்லைப் பகுதிகளில் ராணுவத் துருப்பினரும், காவல்துறையினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சுமார் 120,000 பேர், பட்டாங்கஸ் (Batangas) மாநிலத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

எரிமலைக் குமுறல் காரணமாக எவரும் மாண்டதாகவோ, காயமுற்றதாகவோ தகவல் இல்லை.

5 நாள்களாக குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையின் சீற்றம் தணிந்துவருவதாய்த் தவறாக நினைக்கவேண்டாம் என மக்களை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்