Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ் தால் எரிமலைச் சீற்றம் - தொடரும் விழிப்பு நிலை

பிலிப்பீன்ஸில் தால் (Taal) எரிமலைச் சீற்றம் காரணமாக அந்த வட்டாரத்தில் விழிப்பு நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ் தால் எரிமலைச் சீற்றம் - தொடரும் விழிப்பு நிலை

(படம்: AP Images)

பிலிப்பீன்ஸில் தால் (Taal) எரிமலைச் சீற்றம் காரணமாக அந்த வட்டாரத்தில் விழிப்பு நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலைக் குமுறல் தொடர்பிலான விழிப்புநிலை அளவுகோலின் கீழ், 4ஆவது நிலை தொடர்கிறது.

எந்த நேரத்திலும் எரிமலை வெடிக்கும் சாத்தியம் இருப்பதாக அதற்குப் பொருள்.

கடந்த ஒரு வாரமாக அந்த எரிமலை சாம்பலையும், புகையையும் கக்கிவருகிறது.

அதனைச் சுற்றியுள்ள சுமார் 160,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். 400க்கும் மேற்பட்ட முகாம்களில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், எரிமலைக்கருகில் உள்ள பினான்(Binan) நகர மக்கள் எரிமலைச் சாம்பலுடன், பிளாஸ்டிக் கழிவு, மணல், சிமெண்ட் ஆகியவற்றைக் கலந்து செங்கற்களைத் தயாரித்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 5,000 செங்கற்கள் தயாராகின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்