Images
  • train (2)
    (படம்: REUTERS)

தைவானில் விபத்துக்குள்ளான ரயிலில் இருந்து கடைசிச் சடலத்தை மீட்க முனையும் பணியாளர்கள்

தைவானில் ஏற்பட்ட கோரமான ரயில் விபத்தை அடுத்து, ரயில் சிதைவுகளுக்கு இடையிலிருந்து கடைசிச் சடலத்தை மீட்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

சடலம், 15 டன் எடைகொண்ட ரயில் பெட்டியின்கீழ் சிக்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

பயணியின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

சென்ற வாரம் நேர்ந்த அந்த விபத்தில், 50 பேர் மாண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

500 பயணிகளுடன் தைப்பேயிலிருந்து சென்றுகொண்டிருந்த ரயில், கனரக வாகனம் ஒன்றின் மீது மோதித் தடம்புரண்டது.

கடந்த 70 ஆண்டுகளில், தைவான் சந்தித்த ஆக மோசமான ரயில் விபத்து அது.

சரிவாக இருந்த கட்டுமானத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் நழுவி, சுரங்கப் பாதைக்கு முன்னால், ரயில் தண்டவாளத்தில் விழுந்தது.

வாகனத்தின் நிறுத்தும் விசை சரியாக செயல்படுத்தப்படவில்லை என்ற சந்தேகத்தில், அதன் ஓட்டுநர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

விபத்து நேர்ந்த பாதையில், இம்மாதம் 20ஆம் தேதிவரை, ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது.

-Reuters 

Top