Images
  • taiwan covid
    (கோப்புப் படம்: AFP/Sam Yeh)

தைவான்: 3 வாரங்களில் உள்ளூர் அளவில் இருவருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று

தைவானில் கடந்த மூன்று வாரங்களில் உள்ளூர் அளவில் இருவருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் மருத்துவர். மற்றொருவர் தாதி. இருவரும் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களுக்குச் சிகிச்சையளித்தவர்கள்.

அவர்கள் இருவரும் பணியாற்றிய மருத்துவனையில் இருந்த மற்ற நோயாளிகள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதாகத் தைவானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

என்றாலும், அந்த மருத்துவமனைக்குள்ளேயே கிருமி பரவியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

உலகில் கிருமித்தொற்று தொடங்கிய காலத்திலிருந்தே தைவான் அதைச் சிறப்பாகச் சமாளித்து வருகிறது.

அங்கு ஆயிரத்துக்கும் குறைவானவர்களே நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கடந்த எட்டு மாதங்களில் முதன்முறை சென்ற மாதம் தைவானில் உள்ளூர் அளவில் ஒருவருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.  

Top