Images
  • lennon wall
    (படம்:  Reuters/Tyrone Siu)

சீன வருகையாளர்களுக்குத் தடை - தைவான் ஆலோசனை

ஹாங்காங் ஆர்ப்பாட்டக்கார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், சீன வருகையாளர்களுக்குத் தடைவிதிப்பது பற்றித் தைவான் ஆலோசித்து வருகிறது.

ஜனநாயக ஆர்வலர்களைக் குறிவைப்போர் மீதும் Lennon Wall என்று அழைக்கப்படும் சுவரில் காணப்படும் ஆர்ப்பாட்ட-ஆதரவு வாசகங்ளைப் பாழ்படுத்துவோர் மீதும் அத்தகைய தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தைவானியக் குடிநுழைவு அதிகாரிகள் கிடைக்கும் புகார்களைப் பரிசீலித்து தவறுசெய்வோரைத் தடைசெய்வர் என்றும் கூறப்படுகிறது.

அந்தக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு, அரசாங்க நிறுவனங்களுக்கு அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) நேற்று உத்தரவிட்டார்.

தைவான் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இடம் என்றும், முரண்பட்ட நடவடிக்கைகளை அது பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

குறைந்தது ஆறு தைவானியப் பல்கலைக்கழகங்கள், தங்கள் வளாகங்களில் உள்ள Lennon சுவர்கள் பாழ்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் செய்திருந்தன.

அவற்றை சீனத் தலைநிலத்தில் இருந்து வந்து தைவானில் படிக்கும் மாணவர்கள் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 

Top