Images
  • Tsai
    படம்: AFP

தைவானிய அதிபர் தேர்தல்: தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபரானார் சாய் இங் வென்

தைவானில் இன்று நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சாய் இங் வென் வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சாய் இங் வென் இரண்டாவது தவணைக்கு அதிபராகப் பொறுப்பேற்கிறார்.

வாக்களித்த மக்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார் அதிபார் சாய்.

63 வயது திருமதி சாய் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு தைவானின் அதிபராகப் பணியாற்றுவார்.

ஆகக் கடைசி நிலவரப்படி, திருமதி சாய் 57 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜனநாயக முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த அதிபர் சாய், தைவானிய சுதந்திர நிலைப்பாட்டை ஆதரிப்பவர்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குவோமிந்தாங் கட்சியின் திரு. ஹான் குவோ யூ (Han Kuo-Yu)சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்.

சீனாவுடன் இன்னும் இணக்கமான போக்கைத் தைவான் பின்பற்றினால், தைவான் மேலும் வளம்பெறும் என்பது அவரது நம்பிக்கை.

திரு. ஹான், சுமார் 39 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

23 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானில் 19 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.  

Top