Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் நிலநடுக்கத்தில் 17 பேர் காயம்

தைவானியத் தலைநகர் தைப்பேயை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தைவான் நிலநடுக்கத்தில் 17 பேர் காயம்

படம்: REUTERS

தைவானியத் தலைநகர் தைப்பேயை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தில் 17 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆகப் பதிவானது.

பிரபல Taroko தேசியப் பூங்காவில், பாறைகள் பெயர்ந்து விழுந்ததில் மலையேறிகள் இருவர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மலேசியர்.

கிட்டத்தட்ட மரணத்தின் தறுவாயில் இருந்த அந்த 40 வயது ஆடவரை, மருத்துவர்கள் அரும்பாடு பட்டு உயிர் பிழைக்க வைத்தனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மற்றொரு மலையேறியான, 54 வயது தைவானிய மாதுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நேற்று தைப்பே குடியிருப்புக் கட்டடம் ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 100 பேர் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்