Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் மருத்துவமனையில் தீ - குறைந்தது 9 பேர் மரணம்

தைவானில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 9 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
தைவான் மருத்துவமனையில் தீ - குறைந்தது 9 பேர் மரணம்

(படம்: New Taipei City fire department/Facebook)

தைவானில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் குறைந்தது 9 பேர் மாண்டனர்.

15 பேர் காயமடைந்தனர்.

அதிகாலை நாலரை மணியளவில் சின் சுவான் (Xinzhuang) பகுதியில் உள்ள மருத்துமவனையில் தீப்பற்றிக்கொண்டது.

மருத்துவமனையின் 7ஆவது மாடியில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வார்டில் தீ தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயை அணைக்க 200க்கும் அதிகமான தீயணைப்பாளர்கள் சுமார் ஒரு மணி-நேரம் போராடினர்.

படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளும் கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த மருத்துவமனை, முற்றிய நோய்களைக் கொண்டோருக்கான அந்திமகால இல்லம் என AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்