Images
  • taiwan (1)
    (படம்: AFP/Mandy CHENG)

தைவானின் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது - சீனாவில் செயல்படும் தைவானிய நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

சீனத் தலைநிலத்தில் செயல்படும் தைவானிய நிறுவனங்கள், தைவானியச் சுதந்திரத்துக்கு ஆதரவாய்ச் செயல்படக்கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது.

சீனத் தலைநிலத்து அதிகாரிகள், தைவானிய வர்த்தகக் குழுமம் ஒன்றுக்கு அபராதம் விதித்துள்ளதாகத் தகவல் வெளியான சில மணி நேரத்தில், பெய்ச்சிங்கின் எச்சரிக்கை வெளியானது.

சீனாவில் செயல்படும் தைவானிய நிறுவனங்கள்மீதும், அவற்றில் முதலீடு செய்துள்ள சீன நிறுவனங்கள்மீதும் நிதி-ரீதியாக நெருக்கடி அளிக்கும் நடவடிக்கை இது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தைவானியச் சுதந்திரத்தை ஆதரிப்போர் மீது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தடை விதிக்கப்படும் என, இந்த மாதத் தொடக்கத்தில் பெய்ச்சிங் எச்சரித்திருந்தது.

 

Top