Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கூடுதலாக 36 மில்லியன் முறை போடத் தேவையான Moderna தடுப்புமருந்துகளைப் பெறும் தைவான்

தைவான், இன்னும் கூடுதலாக 36 மில்லியன் முறை போடத் தேவையான Moderna தடுப்புமருந்துகளைப் பெறத் திட்டமிடுகிறது.

வாசிப்புநேரம் -

தைவான், இன்னும் கூடுதலாக 36 மில்லியன் முறை போடத் தேவையான Moderna தடுப்புமருந்துகளைப் பெறத் திட்டமிடுகிறது.

இதுவரை, Moderna, AstraZeneca ஆகிய நிறுவனங்களிடமிருந்து சுமார் 9 மில்லியன் முறை போடத் தேவையான தடுப்புமருந்துகள் தைவானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதில் சுமார் 6 மில்லியன் தடுப்புமருந்துகள், தைவானின் தடுப்பூசித் திட்டத்தை முடுக்கிவிட ஜப்பான், அமெரிக்கா ஆகியவை அளித்த நன்கொடை.

தைவான் ஏற்கனவே 5 மில்லியன் முறை போடத் தேவையான Moderna தடுப்புமருந்துகளைப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.

அதற்கும் மேலாக, 36 மில்லியன் தடுப்புமருந்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானதாக, தைவானிய அமைச்சரவைப் பேச்சாளர் லோ பிங் செங் (Lo Ping-cheng) தெரிவித்தார்.

அது குறித்து, Moderna நிறுவனம் இன்னும் கருத்துத் தெரிவிக்கவில்லை.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்