Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவானிய ஆகாயப்படை F-16 ரகப் போர் விமானங்களை முடக்கியது

தைவானிய ஆகாயப்படை, தன்னிடமுள்ள F-16 ரகப் போர் விமானங்கள் அனைத்தையும் முடக்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -

தைவானிய ஆகாயப்படை, தன்னிடமுள்ள F-16 ரகப் போர் விமானங்கள் அனைத்தையும் முடக்கியுள்ளது.

பயிற்சியின்போது F-16 ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) அதனை அறிவித்தார்.

ஒரு மாதத்துக்குள் அவ்வாறு நேர்வது, இது இரண்டாவது முறை.

இந்த ஆண்டில், தைவானிய ராணுவத்தில் நேர்ந்துள்ள நான்காவது விமான விபத்து இது.

பாதுகாப்புச் சோதனைகளுக்காக, F-16 ரகப் போர் விமானங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டிருந்ததாக அதிபர் சாய் கூறினார்.

தற்காப்பிலும் போர் ஆயத்தநிலையிலும் மெத்தனமாக இருக்கவேண்டாம் என்று தற்காப்பு அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சீன ஊடுருவலுக்கு எதிராகத் தனது ஆகாயப் படை விமானங்களைப் பணியில் ஈடுபடுத்தியதில் இந்த ஆண்டு, கிட்டத்தட்ட 900 மில்லியன் டாலர் செலவானதாக, தைவான் சென்ற மாதம் கூறியிருந்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்