Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றி: தைவானிய அதிபர்

அமெரிக்காவின் ஆதரவுக்குத் தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-Wen) நன்றி தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் ஆதரவுக்கு நன்றி: தைவானிய அதிபர்

(படம்: REUTERS/Tyrone Siu)

அமெரிக்காவின் ஆதரவுக்குத் தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-Wen) நன்றி தெரிவித்துள்ளார்.

CNNக்குப் பேட்டியளித்த அவர், அமெரிக்கர்கள் தைவானைத் தற்காப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார்.

அனைத்துலக அமைப்புகளில் தனது உரிமையைப் பெறத் தைவான் தொடர்ந்து போராடும் என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வூ (Joseph Wu) கூறினார்.

செக் குடியரசின் தலைநகர் பிராகில் (Prague) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜனநாயக நாடுகள் ஒன்றுக்கொன்று உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்