Images
  • taiwan
    (படம்: AFP/Philippe Lopez)

தைவானியத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிபர் சாய்க்கு சிங்கப்பூர் வாழ்த்து

தைவானியத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற அதிபர் சாய் இங் வென்னுக்கும் (Tsai Ing-wen) அவரது கட்சிக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கும் தைவானுக்கும் இடையில் பல்லாண்டு காலமாக நெருக்கமான நட்புறவு இருந்து வருவதை அமைச்சு சுட்டியது.

சிங்கப்பூரின் 'ஒரு சீனா'க் கொள்கை அடிப்படையில் அந்த நட்புறவைத் தொடர்ந்து மேம்படுத்தப் போவதாக வெளியுறவு அமைச்சு சொன்னது.

நேற்று நிறைவுபெற்ற தைவானியத் தேர்தலில் சாதனை அளவில் 8 மில்லியன் வாக்குகளைப் பெற்று அரசவையில் பெரும்பான்மையை வென்றது சாய் இங் வென்னின் ஜனநாயக முற்போக்குக் கட்சி.  

Top