Images
  • taiwan (1)
    (படம்: AFP/Sam Yeh)

சர்ச்சைக்குரிய தைவான் நீரிணையை மீண்டும் கடந்து சென்ற அமெரிக்க போர்க்கப்பல்

அமெரிக்கப் போர்க் கப்பல் மீண்டும் தைவான் நீரிணையைக் கடந்து சென்றுள்ளது.

அது வழக்கமான நடவடிக்கைதான் என்று அமெரிக்கா கூறியது.

அவ்வாறு செய்வதன் மூலம் வாஷிங்டன் குழப்பம் ஏற்படுத்த முனைவதாகச் சீனா குற்றஞ்சாட்டியது.

அனைத்துலக சட்டங்களுக்கேற்பவே, தனது போர்க் கப்பல் தைவான் நீரிணை வழியாகச் சென்றதாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்துள்ளது.

தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிபிக் வட்டாரத்துக்குத் தான் கொண்டுள்ள கடப்பாட்டுக்குச் சான்றாக அந்த நடவடிக்கை அமைவதாக வாஷிங்டன் தெரிவித்தது.
 

Top