Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் ரயில் விபத்து: சிதைவுகளை முழுமையாக அகற்றும் முயற்சியில் பணியாளர்கள்

தைவானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தையடுத்து பணியாளர்கள் அங்கிருந்து சிதைவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

வாசிப்புநேரம் -
தைவான் ரயில் விபத்து: சிதைவுகளை முழுமையாக அகற்றும் முயற்சியில் பணியாளர்கள்

(படம்: AFP/Sam Yeh)

தைவானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோசமான ரயில் விபத்தையடுத்து பணியாளர்கள் அங்கிருந்து சிதைவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதுவரை மூன்று ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.

இன்னும் இரண்டு பெட்டிகளை அகற்றவேண்டியுள்ளது.

அந்த இரண்டு பெட்டிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளன. அவை கனரக வாகனத்தின் மீது மோதியவை.

பெட்டிகளை அறுத்துப் பிரித்து எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

தண்டவாளத்தில் விழுந்துகிடந்த கனரக வாகனத்தின் மீது, சுரங்கம் வழி வந்த பயணிகள் ரயில் மோதியதில் விபத்து நேர்ந்தது.

கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கனரக வாகனத்தின் நிறுத்தும் விசை சரியாகச் செயல்படுத்தப்படாமல், அது சரிந்து தண்டவாளத்தில் விழுந்ததாகக் கூறப்பட்டது.

விபத்தில் 50 பேர் மாண்டனர், 200 பேர் காயமடைந்தனர்.

விபத்தின் போது ரயிலில் 494 பயணிகள் இருந்தனர்.

தைவான் வரலாற்றில் ஏற்பட்ட ஆக மோசமான ரயில் விபத்து அது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணை தொடர்கிறது.

- AP
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்