Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தைவான் இருப்பதை மறுக்கமுடியாது - அதிபர் ட்ஸாய்

தைவான் ஒரு நாடு என்பதை யாராலும் மறுக்கமுடியாது என்று அநநாட்டு அதிபர் ட்ஸாய் இங்-வென் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தைவான் இருப்பதை மறுக்கமுடியாது - அதிபர் ட்ஸாய்

(படம்: REUTERS/Tyrone Siu)

தைவான் ஒரு நாடு என்பதை யாராலும் மறுக்கமுடியாது என்று அநநாட்டு அதிபர் ட்ஸாய் இங்-வென் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கு இன்று பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தன்னாட்சி நிர்வாகம் கொண்ட சுதந்திர தைவான் தனக்குச் சொந்தமானது என்று சீனா கூறிவருகிறது.

தைவானைத் தனி தேசமாக அடையாளங்காணும் நாடுகளின் பட்டியலை சீனா குறைத்துக்கொண்டே வருகிறது. பதினெட்டே நாடுகள் இப்போது தைவானைத் தனி நாடாகப் பார்க்கின்றன.

பங்காளிகளாக இருந்த புர்க்கினா ஃபாசோ, டாமினிக் குடியரசு இரண்டும் இப்போது பெய்ச்சிங் பக்கம் சாய்ந்துவிட்டன.

விடாப்பிடியாகப் பேசிய திருவாட்டி ட்ஸாய் தைவானின் அரசதந்திர பங்காளி நாடுகளான பெலீஸ், பராகுவே ஆகியவற்றுக்கும் பயணம் மேற்கொள்வார்.

தாம் வெளிநாட்டுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும்போது சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் ஆதரிக்கும் ஒரு நாடாக உலகம் தைவானைப் பார்க்கும் என்பதை அவர் சுட்டினார்.

வர்த்தகம், இருதரப்பு உறவு போன்ற அம்சங்களைப் பற்றி திருவாட்டி ட்ஸாய் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

தைவானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையே அதிகாரத்துவத் தொடர்பு இல்லை. ஆனால், அமெரிக்கா, தைவானின் ஆக வலுவான பங்காளி நாடு, அதற்கு ஆயுதங்கள் விநியோகிக்கும் ஒரே நாடும்கூட.

அமெரிக்காவும் சீனாவும் வர்த்தகப் போரில் ஈடுபட்டுவரும் இந்த வேளையில் திருவாட்டி ட்ஸாயின் அமெரிக்கப் பயணம் இடம்பெறுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்